Profile

இராமநாதபுரம் மாவட்டம்


                                        இராமநாதபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் இராமநாதபுரம் ஆகும். தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தளமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.

வருவாய்கோட்டங்கள்

இராமநாதபுரம்
பரமக்குடி

வருவாய் வட்டங்கள்

இராமநாதபுரம்
பரமக்குடி
கடலாடி (வட்டம்)
கமுதி
முதுகுளத்தூர்
இராமேஸ்வரம்
திருவாடானை

நகராட்சிகள்

இராமநாதபுரம்
பரமக்குடி
இராமேஸ்வரம்
கீழக்கரை

ஊராட்சி ஒன்றியங்கள்

ஊராட்சி ஒன்றியம் -- (ஊராட்சி)
இராமநாதபுரம் - (25)
பரமக்குடி - (39)
கடலாடி - (60)
கமுதி - (53)
முதுகுளத்தூர் - (46)
திருவாடானை - (47)
போகலூர் - (26)
மண்டபம் - (28)
நயினார்கோவில் - (37)
திருப்புல்லாணி - (33)
இராஜசிங்கமங்கலம் - (35)

பேரூராட்சிகள்

கமுதி
முதுகுளத்தூர்
அபிராமம்
தொண்டி
மண்டபம்
சாயல்குடி
இராஜசிங்கமங்கலம்

தீவுகள்

மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:

பாம்பன் தீவு
அப்பா தீவு
குருசடை தீவு
முயல் தீவு
முளித் தீவு
தலையாரித் தீவு









0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top